Print this page

சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில்

எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது.

112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, இம்முறை அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.