Print this page

டயானா கமகேவை பிடியாணை இன்றி கைது செய்யலாம்

February 09, 2023

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் இன்று தெரிவித்துள்ளார்.

டயானா கமகே வெளிநாட்டு பிரஜை என நீதிமன்றில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்தார்.