Print this page

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு திறைசேரிக்கு தகுதியில்லை

February 11, 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு திறைசேரிக்கு தகுதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான கடமைகளை ஆரம்பிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 770 மில்லியன் ரூபாவை கோரிய போதிலும், இதுவரை நிதியமைச்சு அந்த தொகையை வழங்கவில்லை.