Print this page

அனுரவுக்கு ஒரு நாட்டை ஆள்வதற்கு தேவையான சர்வதேச தொடர்புகள் இல்லை-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

February 12, 2023

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரவுக்கு ஒரு நாட்டை ஆள்வதற்கு தேவையான சர்வதேச தொடர்புகள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குறைந்தபட்சம் மாலைதீவில் கூட எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் ,இன்று மக்கள் விடுதலை முன்னணி மக்களை பயமுறுத்தி கூட்டங்களுக்கு
அழைப்பதாகவும் கூட்டங்களுக்கு வராதவர்களை அடுத்த தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது என்று கூறி மக்களை பயமுறுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.