Print this page

இன்று பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு

February 13, 2023

இரத்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக மூன்று பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இரத்தோட்டை, கைகாவல மற்றும் வெரகம பிரதேசங்களுக்கு நாளை (13) இரவு 8:00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6:00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.