Print this page

இலங்கை - சீனா உறவு குறித்து இந்தியாவிற்கு கவலை வேண்டாம்

February 13, 2023

சீனா இலங்கையின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்பட இலங்கை அனுமதிக்காது என்பதால், இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் அலி சப்ரி, கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் இலங்கை தமது மண்ணில் நடக்க அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.