Print this page

இரண்டில் ஒரு முடிவு எடுக்கத் தயாராகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

February 15, 2023

நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.