Print this page

விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர் (Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்தள்ளது.

தற்பொழுது புதிய பாதுகாப்பு விதிமுறைகள் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளும் பொது மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகாத வகையில் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்தார்.