Print this page

நீர் கட்டணமும் அதிகரிக்கும் - வேறு வழியில்லை

February 19, 2023

தயக்கத்துடன் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்  ஜீவனா தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

தண்ணீரை சுத்திகரிக்க மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், அதே நேரத்தில் தண்ணீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

தற்போது நீர் கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலவாக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.