Print this page

அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் நாய் சுட்டுக் கொலை!

February 20, 2023

ஜனசெத பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவர் நிலந்த குமார ரணசிங்கவின் வளர்ப்பு நாயை அரம்பேபொல பச்சவத்த வீட்டில் வைத்து அயலவர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரணசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அயலவரை விசாரித்து வாக்குமூலம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு வேளையில் தோட்டத்திற்கு வந்த காட்டுப் பன்றி என நினைத்து அது நாய் என்று தெரிந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க மாட்டேன் என அயலவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாயைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பக்கத்து வீட்டுக்காரருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்றும் அதற்கான உரிமம் அவரிடம் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.