Print this page

உள்ளூராட்சி தேர்தல் குறித்து இன்று இறுதித் தீர்மானம்

February 24, 2023

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான யோசனைக்கு தாம் உடன்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த வாரம் கூடி அதற்கான பணிகளை மேற்கொள்வதாக அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழ் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்று கூடி தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 24 February 2023 02:40