Print this page

மார்ச் 9இல் தேர்தல் இல்லை, எப்போது நடக்கும் என மார்ச் 3இல் தெரியவரும்

February 24, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் 9ஆம் திகதி நடத்தப்படாது எனவும், புதிய திகதி மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய திகதி அறிவிக்கப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்வதில் தலையிடுமாறு பாராளுமன்ற சபாநாயகருக்கு கோரிக்கையை அனுப்புவதற்கு ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய அறிக்கையும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.