Print this page

பாணந்துறையில் பயங்கரம், கோடீஸ்வர வர்த்தகர் சுட்டுக் கொலை!

February 28, 2023

பாணந்துறை பின்வத்தை திதிமன் சில்வா மாவத்தையில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சொகுசு ஜீப்பில் காலி வீதியிலிருந்து கரையோர வீதியை நோக்கி பயணித்த ஜீப் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொகுசு ஜீப்பில் பயணித்த வர்த்தகர் சாரதி ஆசனத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.