Print this page

மலையக தமிழர் பிரச்சினை குறித்து பிரித்தானிய தூதுக் குழுவிடம் மனோ-ஜீவன் எடுத்துரைப்பு

February 28, 2023

இலங்கை மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக கடமையும், பொறுப்பும் இருப்பதாக எடுத்துரைக்கப்பட்டது.

பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மற்றும் தூதுவரிடம் தமுகூ தலைவர் மனோ கணேசன் இவ்வாறு எடுத்துரைத்துள்ளார். 

நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.