Print this page

இந்தியாவில் பூகம்பம் ஏற்பட்டால் இலங்கையில் பாதிக்கப்படும் நகரங்களின் விபரம் இதோ

February 28, 2023

ஹிம்ச்சல் - உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக  நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் சுமார் எட்டு அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

பொதுவாக நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது, ஆனால் அவை ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் விளைவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண முடியும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்னவின் கூற்றுப்படி, இந்தியாவில் பூகம்பம் ஏற்பட்டால், அதன் விளைவுகள் இலங்கை திருகோணமலை, மானம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய போன்ற பகுதிகள் மற்றும் தெற்கே அம்பலாந்தோட்டை, உஸ்ஸங்கொடை வரை பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றார்.  .

ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியத் தட்டுக்கு அருகில் இலங்கை அமைந்திருப்பதால், அந்தத் தட்டில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கையைப் பாதிக்கக் கூடும் என அவர் குறிப்பிடுகிறார்.