Print this page

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகளை வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.

காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை, மருத்துவ, ஆய்வகப் பணிகள் உள்ளிட்ட இதர சேவைகள் பாதிக்கப்படலாம் என அரச மருந்தாளுநர் சங்கத் தலைவர் அஜித் பி. திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார செயலாளர் நேற்று சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என அரச மருந்தாளுனர் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட 40 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் நேற்று கேட்போர் கூடத்தில் கூடி நாளை முதல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து முடிவு செய்யும் திகதியில் பாரிய வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.