Print this page

தினேஸ் குணவர்த்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், அரசியல் சாசனம் தவறாக வழிநடத்தப்பட்டதும் ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வாறான ஆலோசனைகளை வழங்கி வேண்டுமென்றே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்து அதன் மூலம் மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சித்ததாகக் குற்றம் சுமத்தி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.