Print this page

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கழுகு கண்களால் அவதானிக்கும் அரசாங்கம்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அல்லது கலவரங்கள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபடுபவர்களின் பதிவேடுகளை அடையாளம் கண்டு பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுக்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ அரச சேவையில் வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடாது என்ற கடுமையான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடையாளம் காணப்பட்ட நபர்களின் பதிவேடுகளைப் பெற்று அதை தரவு வங்கி வடிவில் பராமரித்து, அத்தகைய நபர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்கள் எனக் கருதுவதற்கான அடிப்படை ஆவணமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த சீசனில் ஏற்பட்ட போராட்டங்களாலும், அரச சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாலும், இது தொடர்பாக அரச தரப்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பந்தப்பட்டவர்கள் கூட அங்கு அடையாளம் காணப்பட்டனர்.