Print this page

கந்தபளை - எஸ்கடல் தேயிலை தொழிற்சாலை திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக நாசம்

கந்தபளை பார்க் தோட்ட எஸ்கடல் தனியார் தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ள மூன்று மாடி தேயிலை தொழிற்சாலை இன்று (18) காலை திடீரென தீப்பற்றி எரிந்ததில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கந்தபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தபொல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் மற்றும் நுவரெலியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக கந்தபளை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இங்கு உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயினால் நாசமான சொத்துக்கள் தொடர்பில் எவ்வித மதிப்பீடும் செய்யப்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தபளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.