Print this page

சீனாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனா நோக்கி இன்று காலை பயணமாகியுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ. எல். 302 என்ற விமானத்தில் இன்று காலை 7.35 மணியளவில் சீனா பயணமாகியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதியுடன் 27 ​பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.