Print this page

பொலிஸ் மா அதிபருக்கு சேவைக் காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் 20ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார்.

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.