Print this page

பேருவளை கடல் பரப்பில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் இருந்து 34 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பேருவளை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேச மக்களால் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கங்களால் சுனாமி அபாயம் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.