Print this page

மட்டக்குளியில் 39 வயதுடைய நபர் அடித்துக் கொலை

இனந்தெரியாத நபர்களால் கூரிய ஆயுதங்களால்  தாக்கப்பட்ட 39 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்றிரவு மட்டக்குளியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக தாக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். 

படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை.