Print this page

பின்தெனியவில் 10 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

சப்ரகமுவ மாகாணம்  கேகாலை மாவட்டம் அட்டாலை , பின்தெனிய பிரதேசத்தில் கால்வாயில் மூழ்கி 10 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

அதன்படி, அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்ட சிறுமி, தனது சகோதரியுடன் அருகிலுள்ள கால்வாயில் சென்று, இருவரும் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.