Print this page

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை கைது

டுபாயிலிருந்து சட்டவிரோதமானமுறையில் எடுத்துவரப்பட்ட சிகரெட்டுகளுடன், இலங்கை பிரஜையொருவர்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுங்கப்பிரிவினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபரின் பயணப் பொதியிலிருந்து, 16,50,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பிலான, 30,000 சிகரெட்டுகள் அடங்கிய 150 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.