Print this page

இந்நாட்களில் நன்கு நீர் பருகவும்

இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலை செல்லும் குழந்தை குழந்தையின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 கிளாஸ் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.