Print this page

பதுளையில் Big Match வாகன பேரணி இரு உயிர்களை பலியெடுத்தது!

ஊவா பரணகம மகா வித்தியாலயத்திற்கும் தர்மதூத கல்லூரிக்கும் இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பிக் மெட்ச் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற வாகன அணிவகுப்பின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்ததில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியின் போது மைதானத்தைச் சுற்றி வாகனங்கள் அணிவகுத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.