Print this page

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் - சஜித் அணி

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தமது கட்சியின் முன்னாள் தலைவர் எனவும் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தல் வரையில் அந்த வேலைத்திட்டத்தில் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.