Print this page

தேடப்பட்டு வந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் அத்துருகிரியே ஜெரோம் கைது

சில தினங்களுக்கு முன்னர் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியும் (IRC) பாதாள உலக குழு நபரான அங்கொட லொக்காவின் கூட்டாளியுமான "அத்துருகிரியே ஜெரோம்" விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் அத்துருகிரியவில் உள்ள மில்லினியம் சிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரியவில் இடம்பெற்ற வழக்கு தொடர்பில் சந்தேகநபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அதுருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.