Print this page

கொழும்பு ஹோட்டல் ஒன்றில் கேஸ் வெடிப்பு

ஹோமாகம பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஹைலெவல் வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று (04) காலை திடீர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வெடிப்பினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், நேற்று அதிகாலை 04:45 மணியளவில் உணவு விநியோகச் சங்கிலிக்கு சொந்தமான கடையில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடைகளுக்குள் இருந்த பல கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும், முன்பக்க பாதுகாப்பு கண்ணாடிகள் உடைந்து வீதி முழுவதும் சிதறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஹோமாகம பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராக்களின் பிரேம்களை சோதனையிட்டனர். 

சமையல் எரிவாயு கசிவே வெடிப்பிற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.