Print this page

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து மீண்டும் பேச்சு

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் பிரேரணை தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பேற்று புதிய தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ், தேசிய அரசாங்கத்தில் 60 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும்.