Print this page

ஜனாதிபதியின் செயற்பாட்டை புகழ்ந்து பேசுகிறார் சஜித் அணி எம்பி பௌசி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தற்போது பலரும் பாராட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.  பௌசி கூறுகிறார்.

ஒரு நல்ல காரியம் செய்யும் போது அதனை பாராட்ட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவை விட்டு மக்கள் விலகி தற்போது பாராட்டி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த நிலைமையை விட முன்னேற்றமடைந்துள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அந்த நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்ததாக இருந்த பௌசி அண்மையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.