Print this page

35 வயது ரஷ்யா பெண் ஹிக்கடுவையில் சடலமாக மீட்பு

ஹிக்கடுவ தொடகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள மொலபு ஓயா கால்வாயில் ரஷ்ய பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ரஷ்ய பெண்மணி 35 வயதுடையவர் எனவும் அவர் மொலபு ஓயாவிற்கு அருகிலுள்ள வில்லா ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்னர் குறித்த ரஷ்யப் பெண் இந்நாட்டிற்கு வந்திருந்த நிலையில், அவரது சடலம் ஓடையில் மிதப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

காலி பதில் நீதவான் லலித் பத்திரனவின் உத்தரவின் பிரகாரம் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.