Print this page

அனைத்தையும் அம்பலப்படுத்த தயாராகும் மைத்திரிபால

பொது மன்னிப்பு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜூட் ஷ்மந்த அந்தோனி ஜயமஹாவின் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றில் பல்வேறு தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மியுரு பாசித லியனகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

முன்னாள் ஜனாதிபதி கொழும்பு வந்தவுடன் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி இந்த குற்றச்சாட்டுகள்  குறித்து பதில் அளிக்கப்படும் என பாசித லியனகே விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.