Print this page

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மாலை 6.00 மணிமுதல் நாளை காலை 6.00 மணி வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.