Print this page

வாய் திறந்தார் ஜே ஸ்ரீ ரங்கா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய உத்தரவின் பிரகாரம், ரங்கா நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் அவரை 20,000 ரூபா ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் இலங்கசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.

இருப்பினும், கார் விபத்து தொடர்பான வழக்குக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீ ரங்கா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ரங்கா சிறைப் பேருந்தில் ஏறும் போது பின்வருமாறு கூறினார்:

“வாயை மூடிக்கொண்டு பொய்யைப் பாதுகாத்துக் கொள்ளவும் எங்களை சிறையில் அடைக்கவும் முயற்சிக்கின்றனர். வழக்குகளுக்குப் பின் வழக்குகள் போடுவது அரசாங்கமே தவிர வேறு யாருமல்ல. பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீட்டிப்பு கிடைக்கும்” என்றார்.