Print this page

ஜனாதிபதி தேர்தலை நடத்த தயாராகிறார் மைத்திரி

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருகின்றார் எனவும் இது தொடர்பான அறிவிப்பை வெகு விரையில் ஜனாதிபதி விடுப்பார் எனவும், கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன், ஜனாதிபதி ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளாரெனவும் அந்தத் தகவலில் தெரியவருகின்றது.

இந்தப் பின்னணியிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை அவர் நியமித்துள்ளார் எனவும் மாகாணங்களுக்குத் தனது ஆதரவாளர்களை ஆளுநர்களாக நியமித்துள்ளார் என்றும், மேலும் தெரியவருகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவும் ஜனாதிபதிக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.