Print this page

சஹ்ரானுடன் தொடர்புடைய இருவர் கைது

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் இருவரும் ஹொரவபொத்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.