Print this page

கொஸ்கொட சுஜீயின் மருமகனான பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை ரந்தொம்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரியின் பிரதி அதிபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பலப்பிட்டி மிகெட்டுவத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு  இலக்காகியுள்ளார்.

இவர் பாதாள உலக தலைவரான கொஸ்கொட சுஜீயின் மருமகன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதி அதிபர் தர்மசோக வித்தியாலயத்தில் பணிபுரிந்து வரும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.