Print this page

கிணற்றில் குளித்து டவலுடன் வீடு திரும்பிய மாணவி மீது பாலியல் பலாத்காரம்

இரவு 11 மணியளவில் தோட்டக் கிணற்றில் இருந்து குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவியை யாரோ ஒருவர் பிடித்து துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக நிட்டம்புவ  பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி டவல் அணிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இருட்டில் மறைந்திருந்த ஒருவர் திடீரென அவரை கட்டிப்பிடித்து, அவர் அணிந்திருந்த டவலை கழற்றி தரையில் வீசி பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக பொலீஸ் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது

மகளின் அலறல் சத்தம் கேட்ட தாய் ஓடிவரவே உடனடியாக மாணவியை கைவிட்டு சந்தேகநபர் ஓடியதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாயும் மகளும் சந்தேக நபரை அடையாளம் கண்டு பொலிஸில் புகார் அளித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ  பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.