Print this page

300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்

சுமார் 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி தடைகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.