Print this page

இந்திய அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தல் முதலில் வரலாம்

இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகில இலங்கை மாகாண சபை உறுப்பினர் மன்ற கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.