Print this page

மொட்டுக் கட்சி சிரேஷ்ட எம்பிக்களுக்கு ஏமாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சுப் பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை இப்போது வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த எம்.பி.க்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே உள்ளிட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்தின் உயர்மட்ட அலுவலகத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைக்கு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.