Print this page

மரபணு பரிசோதனை அறிக்கை செவ்வாயன்று கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.