Print this page

கோணேஷ்வரம் கோயிலின் கடல் பக்க காட்சியை கண்டு ஆச்சரியப்பட்ட கிழக்கு ஆளுநர்

கிழக்கு கடற்கரைகளுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புதுமையான திட்டங்களை உருவாக்குமாறு சுற்றுலா பணியகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

சில படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு விருந்து, இரவு தங்குதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்புப் திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். 

திருகோணமலை கடற்கரையில் பயணம்  மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் "நாங்கள் திருகோணமலை கடற்கரையில் பயணித்தோம், இந்து மதத்தின் முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றான கோணேஷ்வரம் கோயிலின் கடல் பக்க காட்சியில் நான் ஆச்சரியப்பட்டேன்" என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.