Print this page

‘சாலி’யை கொலை செய்த நபர் கைது

நீ்ர்கொழும்பு – கொப்பரவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட, “சாலி” என்ற பெயருடைய நாயை, மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாலி எனப்படும் லெப்ரடோ வகையைச் சேர்ந்த குறித்த நாயை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர், பெரியமுல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சாலியின் கொலையை அடுத்து, save a pet with love என்ற மிருகங்களைப் பாதுகாக்கும் அமைப்பால், நீர்கொழும்பு பிரதேசத்தில், நேற்று மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இவ்விடயம் குறித்து, மேற்படி அமைப்பினர், இன்று (05) கலந்துரையாடியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.