Print this page

'நாட்டு மக்களிடம் நம்பிக்கையில்லை'

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், அது குறித்து மக்களிடம் இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் மிகவும் கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வெசாக் பௌர்ணமி தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடிய நாட்டில், இன்று கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.