Print this page

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்தின் பின் கிடைக்கும் மிகப் பெரிய நிதி உதவி

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய நிதி நிவாரணம் இதுவாகும்.

அந்தத் தொகையில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும், 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சமூகப் பாதுகாப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.