Print this page

இந்த சூழ்நிலையில் தேர்தல் நடத்த அரசாங்கத்திற்கு பைத்தியமா?

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு பைத்தியமில்லை என வெகுஜன ஊடகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் அன்றாடச் செலவுகளுக்கும் அரசாங்கம் பணத்தை வழங்குவது மிகவும் சிரமமாக உள்ளது என்றார்.

எனவே இந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.