Print this page

இன்று அதிகாலையும் பஸ் விபத்து, இருவர் பலி

அனுராதபுரம் குருநாகல் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது தனியார் பேருந்து பின்னால் இருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் இருபத்தி ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.